சுயமரியாதையை தூக்கிப்போட்டால்தான் பணம், புகழ், வாய்ப்புகள் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட எதுவுமே வேண்டாம்..யாரை பெரிய ஆள் என குக் வித் கோமாளி டீம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களோ அவருக்கே அத்தனையும் கிடைக்கும் என கூலாக வீடியோ வெளியிட்டு குறிப்பிட்ட ஆங்கருடனான பஞ்சாயத்தை டீல் செய்துள்ளார் ஆங்கர் மணிமேகலை.நிகழ்ச்சியில் குக்காக உள்ள விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர்தான் மணிமேகலையின் அதிரடி முடிவுக்கு காரணம் என திட்டி தீர்க்கும் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய அடி போதவில்லையா? என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர்..