ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ் அரையிறுத்திக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் பெல்ஜியத்தின் டேவிட் கோபின் உடன் மோதினார். ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுத்திக்கு முன்னேறினார்.