ரோகித் சர்மாவை பாடி ஷேமிங் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ள ஷாமா முகமது, உடல் பிட்னஸ் தொடர்பாக பொதுவாகத்தான் சொன்னதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோனி, கோலி, கங்குலி, டிராவிட், கபில் தேவ் உள்ளிட்ட முந்தைய கேப்டன்களை ஒப்பிட்டுதான் அந்தக் கருத்தை பதிவிட்டதாக தெரிவித்தார்.