நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி தனது மகனுடன் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். புகழ்பெற்ற இத்திருக்கோயிலுக்கு உறவினர்களுடன் வந்த ஷாலினிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது, ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது மறுப்பு தெரிவித்து புறப்பட்டு சென்றார்.