மகளிர் டி20 போட்டிகளில் இளம் வயதில் இரண்டாயிரம் ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஷஃபாலி வர்மா. மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, 20 வயதாகும் ஷஃபாலி வர்மா இளம் வயதில் டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக 23 வயதில் 2000 ரன்கள் எடுத்த அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸின் சாதைனையையும் அவர் முறியடித்துள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் எடுத்த ஐந்தாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஷஃபாலி வர்மா.