தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடுமையான சட்டங்கள் இருந்தும் பெண்கள் மீதான வன்முறைகளும் ,தாக்குதல்களும் அதிகரித்து காணப்படும் நிலையில், குறைந்தபாடில்லை...நாட்டில் போக்சோ சட்டங்கள் இருந்தும், போதுமான பலனை அது பெற்று தராத நிலையில் பெற்றோர்கள் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் சூழலும் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது..கல்வி அனைத்தையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கை பிறந்து வரும் நிலையில், படிப்பு சொல்லி தரும் இடங்களிலும், கவலையை கொட்டி தீர்க்க செல்லும் கோயிலிலும் பாலியல் வக்கிரங்கள் நடந்து வருவது ஜீரணிக்க முடியாததாக உள்ளது.. அந்த வகையில் தேனி மாவட்டம் பெரிய குளம் வடகரை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் 70 வயதான திலகர். இவர் சம்பவத்தன்று கோயிலில் பூஜை வேலைகளை செய்து விட்டு பின்னர் அங்கு கோயிலின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கியதாக தெரிகிறது. பின்னர் சிறுமிகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பூசாரி திலர்கர் அவர்களுடன் பேச்சுக் கொடுப்பது போல் சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.அப்போது அலறி அடித்துக்கொண்டு பூசாரியிடமிருந்து தப்பி ஓடி வந்த சிறுமி ஒருவர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பூசாரியை தாக்குவதற்காக ஒன்று கூடியபோது பூசாரி அவரிடமிருந்த சிறுவர்களை வெளியில் அனுப்பிவிட்டு கோயில் கதவை பூட்டி உள்ளேயே ஒளிந்து கொண்டார் . இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பூசாரியை தாக்க முறபட்ட நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் திலகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறையில் அடைத்துள்ளனர்.