விங் கமாண்டர் அந்தஸ்தில் இருக்கும் தமது மேல் அதிகாரி தமக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இந்திய விமானப்படை பெண் அதிகாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.பெண் அதிகாரியின் புகாரை அடுத்து குறிப்பிட்ட விங் கமாண்டர் மீது காஷ்மீர் பத்காம் காவல் நிலையத்தில் ஐபிசி 376 ஆவது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஸ்ரீநகர் விமானப்படை தள ஆபிசர்ஸ் மெஸ்-சில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு அங்குள்ள தமது அறைக்கு வரவழைத்து தம்மை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக இந்த 26 வயதான விமானப்படை பெண் அதிகாரி புகார் அளித்துள்ளார். விமானப்படை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால் போலீசில் புகார் அளித்த தாக அவர் கூறினார்.