ஆந்திராவில் நவீன கர்ணன் என புகழப்பட்ட பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது இளம் நடிகை பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நிர்வாண புகைப்படங்களை எடுத்து வைத்து கொண்டு 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், அதை சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக ஹர்ஷா சாய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.