சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தினார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தை வைத்து அதிமுக அரசியல் செய்ய விரும்புவதாக விமர்சித்துள்ளார்.