நடிகர் சல்மான் கான் வீட்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. கடந்தாண்டு அவர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன், தொடர்ச்சியான அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.