கிரீஸ் நாட்டின் ஏதென்சில் நடைபெற்ற ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் இறுதிப்போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் இத்தாலி முன்னணி வீரர் முசெட்டியை எதிர்கொண்ட ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஏடிபி (ATP) டூரில் தனது 101ஆவது பட்டத்தை ஜோகோவிச் வென்றார். ஹெலனிக் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஜோகோவிச் தனது ஜெர்ஸியை கிழித்து ஆக்ரோஷமாக கொண்டாடிய காட்சிகள் வைரலாகியுள்ளன.