அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரே நாளில் இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து முடிக்காமல், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியுமா? என உச்சநீதிமன்றத்தில் விளக்கம் பெற வேண்டியிருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், சாட்சிகள் விசாரணைக்காக பிற்பகலுக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக கூறினார். இதையடுத்து, பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.