தொடர் மழையால், நெல் மணிகள் நனைந்து முளைத்தது போல், திமுக எதிர்ப்பு முளைத்து, ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்ப போவது உறுதி என்று, தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். நெல் மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல், மழையில் நனைய விட்டு, வேடிக்கை பார்த்து, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்திருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்மணிகள் முதல்முறை வீணான போதே, தமிழக அரசு மீதமுள்ளதை பாதுகாத்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பி உள்ளார். வெற்று விளம்பரத்துக்காக டெல்டாக்காரன் என முதலமைச்சர் பெருமை பேசி வருவதாகவும், மழையில் நெல்மணிகளை நனையவிட்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசை என்னவென்று சொல்வது என்றும் சாடினார். நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாதது ஏன்?, விளை நிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை, த.வெ.க. தலைவர் விஜய் எழுப்பியுள்ளார்.இதையும் பாருங்கள்... திடீர் பதிவு.. பரபரப்பை கிளப்பிய விஜய் | TVKVijay | DMKGovernment | VijayCondemnsDMK