அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்புகளுக்கு ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு:ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக, ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ (அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, செங்கோட்டையன் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக, இபிஎஸ் அறிவித்தார். இபிஎஸ் அறிவிப்பின் விவரம்:ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியன்நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணிகோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.டி.குறிஞ்சிநாதன் அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.தேவராஜ் அத்தாணி பேரூராட்சி பொறுப்பில் இருக்கும் எஸ்.எஸ்.ரமேஷ் மற்றும் துணைச் செயலாளர் வேலு (எ) தா.மருதமுத்து மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.மோகன் குமார் இன்று முதல் அவரவர் வகுத்து வரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.இதையும் பாருங்கள்; இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Sengottaiyan | AIADMK | TNPoliticsஆதரவாளர்களுக்கு செக்... கூண்டோடு பொறுப்பு பறிப்பு | Sengottaiyan | ADMK | Tamil Breaking News