செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் 2 ஆம் பாகம் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2004-ம் ஆண்டு ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடித்த 7ஜி ரெயின்போ காலனி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் இரண்டு வாரம் மட்டுமே மீதம் இருப்பதாகவும், விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.