ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ள செல்லியாண்டி அம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விடிய விடிய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.