ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வது தொடர்பான பிசிசிஐ ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் என்பதால், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.