'அமரன்' படக்குழுவினரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பாராட்டினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை சந்தித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாராட்டினார். இதுதொடர்பான புகைப்படங்களை ராஜ் கமல் பிலிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு சீமானுக்கு அன்பும், நன்றியும் என குறிப்பிட்டுள்ளது.