ஒடிசா, புவனேஸ்வர்... காதலனை விரட்டிவிட்டு காதலியை சீரழித்த கொடூரன்கள். காதலன் கண்முன்னே சிறுமியை விடிய விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம். தண்ணீர் கேட்டு கதறிய சிறுமியை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்த கொடூரன்கள் யார் யார்? இருட்டுக்குள் இழிவேலையில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகள் சிக்கியது எப்படி? பின்னணி என்ன?ஒடிசா மாநிலம், புவனேஸ்வர சேர்ந்த 20 வயசு இளைஞரும், 17 வயசான சிறுமியும் சாலையோரத்துல நின்னு பேசிட்டு இருந்துருக்காங்க. அப்போ அங்க வந்த ரெண்டு இளைஞர்கள், பேசிட்டு இருந்த காதலர்கள சரமாரியா தாக்கிருக்காங்க. அதிலும் குறிப்பா, காதலன சகட்டுமேனிக்கு அடிச்சி உதைச்சு காயப்படுத்தியிருக்காங்க. அங்க இருந்த சிறுமியோட கை, கால்கள கயிறால கட்டி பாலியல் வன்கொடுமை செஞ்சிருக்காங்க. தடுக்க வந்த காதலன பக்கத்துல இருந்த மரத்துல கட்டிப்போட்டு, காதன் கண்முன்னாடியே காதலியான சிறுமிய மாறி மாறி நாசம் பண்ணிருக்காங்க.. அந்த நபர்களோட பிடியில இருந்து நகர முடியாத சிறுமி, தண்ணீர் கேட்டு கதறிருக்காங்க. ஆனா, அப்போதும் மனமிறங்காத அந்த கொடூரன்கள், ஈவு இரக்கமே இல்லாம, அந்த சிறுமிய சிதைச்சு சின்னாபின்னமாக்குனதோட, அத செல்போன்ல வீடியோவும் எடுத்திருக்காங்க. அத்தோட, இத வெளில யாருக்கிட்டயாச்சு சொன்னா, செல்போன்ல இருக்குற வீடியோவ நெட்ல விட்டிருவேன்னு சொல்லி மிரட்டியிருக்காங்க.காதலி அனுபவிச்ச கொடுமையை பாத்து தாங்க முடியாம இளைஞர் கத்தி கூச்சல்போட, அவர கட்டையால சரமாரியா அடிச்சியிருக்காங்க. இரவு நேரங்குறதால இளைஞரோட குரல் யாருக்குமே கேக்கல. விடிய விடிய சிறுமிய சீரழிச்ச மூணு பேரும் தங்களோட இச்சை தீர்ந்ததும் அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க.இளைஞரோட வாக்குமூலத்த அடிப்படையா வச்சி, சம்பவம் நடந்த சரவுண்டிங்ல உள்ள எல்லா சிசிடிவி கேமராக்களையும் அலசி ஆராஞ்ச போலீஸ், இளைஞர் சொன்ன அங்க அடையாளத்தையும் வச்சி தேடுதல் வேட்டையில ஈடுபட்டாங்க. அதுல, சிறுமிய நாசம் பண்ணிட்டு சர்வ சாதாரணமா தெருவுல நடமாடிட்டு இருந்த மூணு பேர தட்டி தூக்குன போலீஸ், ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்து விசாரிச்சிருக்காங்க. அப்போ, சார் எங்களுக்கு எதுவுமே தெரியாதுனும், அந்த பொண்ண பாத்ததுக்கூட கிடையாதுன்னும் சொல்லிருக்காங்க. மூணு கொடூரன்களும் அடுக்கடுக்கா பொய் சொல்றத பாத்து டென்ஷனான போலீஸ்காரங்க, அவங்க பாணியில விசாரிச்சிருக்காங்க. காவல்துறையினரோட அடிய தாங்க முடியாத அந்த கொடூரன்கள் சிறுமிய நாங்கதான் பாலியல் வன்கொடுமை பண்ணோம்னு வாக்குமூலம் கொடுத்திருக்காங்க.அந்த வாக்குமூலம் அடிப்படையில மூணு பேர் மேலயும் வழக்குப்பதிவு பண்ண போலீஸ்காரங்க அவங்கள அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளிருக்காங்க. அதேநேரம், இந்த கொடூர சம்பவத்துல வேற யாருக்காவது தொடர்பு இருக்கானும் தெரிஞ்சுக்க தீவிர விசாரணையில ஈடுபட்டு இருக்காங்க காவல்துறையினர்.