ஆந்திரா மாநில ஸ்ரீகாகுளத்தில் 35 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து சாலையோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பாடுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.