2025க்கு விடைகொடுத்து 2026ஐ வரவேற்ற உலக நாடுகள் கண்கவர் வாண வேடிக்கைகளை நிகழ்த்தி அசர வைத்தன. கவுன்ட்டவுன் முடிந்ததும் வானை அலங்கரித்த வாணவேடிக்கைகளையும், டிரோன் காட்சிகளையும் மக்கள் கண்டு களித்த நிலையில் வண்ணமயமான கொண்டாட்ட தொகுப்பை காணலாம். வண்ண விளக்குகளால் ஜொலித்த பாரிஸ் நகரம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கவே, வாணவேடிக்கைகளை நிகழ்த்தி, புது ஆண்டிற்கு வண்ணமயமாக மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.புத்தாண்டை ஒட்டி லண்டனில் கண்கவர் வாணவேடிக்கைபுத்தாண்டு வருகையை லண்டனில் கண்கவர் வாணவேடிக்கைகளை நிகழ்த்தி மக்கள் கொண்டாடினர். இருளால் சூழ்ந்திருந்த வானம் இரவு 12 மணியானதும் வண்ண வாணவேடிக்கைகளால் ஜொலித்தது. உலகில் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபா ஜொலித்ததுதுபாயில் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவில் கவுன்ட்டவுன் போடப்பட்டு புத்தாண்டு பிறந்தவுடன், வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது, டிரோன் காட்சிகளும் கண்ணை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தன.4டி லைட்டுகளால் வானை ஒளிரூட்டி கொண்டாட்டம் சுற்றுச்சுழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாத வகையில், புத்தாண்டு பிறப்பை தாய்லாந்தில் 4டி லைட்டுகளால் வானை ஒளிரூட்டி கொண்டாடினர். புத்தாண்டை வரவேற்ற 2ஆவது நாடு 2ஆவது நாடாக புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்தில் வாணவேடிக்கைகள் களைகட்டியது. நியூசிலாந்தின் மிக உயரமான கட்டடமான ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் கோபுரத்திலிருந்து வண்ணமயமான வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. மேலும், மெழுகுவர்த்திகளை ஏந்தியும், செல்போன்களில் லைட்டுகளை ஒளிரவிட்டும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். 12 நிமிடங்கள் கண்கவர் காட்சி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. 12 நிமிடங்கள் இந்த கண்கவர் காட்சியை சிட்னி மக்கள் கண்டு ரசித்தனர். ஏழு கிலோ மீட்டர் வரை வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. வாணவேடிக்கைகள், டிரோன் காட்சிகத்தாரின் லுசைல் பவுல்வர்டில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில், 2026ஐ வரவேற்று வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. முன்னதாக ஆட்டம் பாட்டம் என குதுகலமான மக்கள் வாணவேடிக்கைகளையும், டிரோன் காட்சிகளையும் கண்டு களித்தனர்.