தனது கேலக்ஸி எஸ் 25 சீரிசில் லேட்டஸ்டாக Galaxy S25Edge என்ற மிகவும் மெல்லிய மாடல் செல்போனை சாம்சங்க் அறிமுகப்படுத்தி உள்ளது. 5.88 மில்லி மீட்டர் மெல்லியதாக இருந்தாலும் கேலக்ஸி போன்களில் பயன்படுத்தப்படும் Qualcomm Snapdragon 8 Elite பிராச சர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 200 MP Primary Camera, சாம்சங்கின் அனைத்து AI அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.12GB RAM+256 GB மற்றும் 12GB RAM+512GB Storage உடன் இரண்டு மாடல்கள் மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த போனின் விலை என்ன என்பதை சாம்சங் சஸ்பென்சாக வைத்துள்ளது.