சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 72 ஆயிரத்தை நெருங்கியது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 975 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் ஒரு ரூபாய் அதிகரித்து 112 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.