நடிகர் கார்த்தியின் சகுனி பட இயக்குனர் சங்கர்தயாள் மாரடைப்பால் காலமானார். தற்போது யோகிபாபுவை வைத்து குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் படத்தை இயக்கிய அவர், அதன் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வரும் போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.