IPL தொடர் முடிந்த பிறகு, அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் விளையாடும் நிலைமைகளை நன்கு அறிந்த சாய் சுதர்சனை டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்வது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், அவரால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியும் எனவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.