செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதன் மூலம் தியாகம் என்கிற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டதாக இ.பி.எஸ். விமர்சனம் செய்துள்ளார்.சேலம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை எனவும், நீதிமன்றமே எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.மேலும், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது எனவும், செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்தால் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும் கூறினார்.