ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் செர்னோபில் அணு மின் நிலையம் சேதமடைந்தது. 1986 ல் ஏற்பட்ட அணுக்கசிவு விபத்துக்கு பிறகு செர்னோபில் அணு மின் நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் உலையில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.