உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, போரில் முதல் முறையாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம்.(ICBM) ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் விதமாக ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.