வடகொரியாவுக்கு சர்வதேச தடைகளை மீறி ரஷ்யா எண்ணெய் விநியோகம் செய்ததை அம்பலப்படுத்தும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் இராணுவ உதவி அளிக்கும் வடகொரியாவுக்கு, ரஷ்யா மறைமுகமாக கப்பல் கப்பலாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. உலகில் எந்த நாடும் வடகொரியாவுக்கு எண்ணெய் விற்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் குவிக்கும் வடகொரியா, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டெழும் என்று கூறப்படுகிறது.