ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான குல்மார்க் பகுதியில் பனி மழையின் ரம்மியமான காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. டெல்லி போன்ற வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து வெயில் வாட்ட தொடங்கியிருக்கும் நிலையில் ஜம்மூ காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கெனவே பனியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் போதிலும் பனிமழையின் தூவானம் நின்றபாடில்லை.