தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் இரண்டாவது முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தார். கடந்த மக்களவை தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி விசாரணைக்காக ஆஜரான நிலையில், இரண்டவது முறையாக எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.