மத்திய பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பிராமண தம்பதிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் விஷ்ணு ரஜோரியா அறிவித்துள்ளார். போபாலில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர், நாம் குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டதால் மதவெறி பிடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.