இந்தியாவில் கிளாசிக் 650 ட்வின் பைக்கை ராயல் என்பீல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கிளாஸிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்டு, 650 சிசி இன்ஜினுடன் புதிய கிளாஸிக் 650 ட்வின் பைக் வெளியாகியுள்ளது. 14.7 லிட்டர் டேங்கைக் கொண்டிருக்கும் இந்த பைக் சுமார் 243 கிலோ எடை உடையது. டிஜி அனலாக் டிஸ்பிளே, ட்ரிப்பர் நேவிகேஷன் ((Tripper Navigation)) மற்றும் USB சார்ஜர் போன்ற பல அம்சங்களுடன் 4 நிறங்களில் வெளியாகியுள்ள, இந்த பைக்கின் ஆரம்ப விலை 3 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.