சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் மோதுவதற்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வரும் 28ஆம் தேதி சென்னை அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணியும் வெற்றி பெற்றது. இரு அணிகளும் 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன.