பிரபல தொழிலதிபர் ஷிவ் நாடார், HCL உள்ளிட்ட தமது நிறுவனங்களில் உள்ள பங்குகளை ஒரே மகளான ரோஷிணி நாடாருக்கு வழங்கி பத்திரம் பதிந்துள்ளார். HCL மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இருக்கும் 47 சதவீத பங்குகளை, மகளுக்கு தான பத்திரமாக கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதை அடுத்து HCL நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராகவும், அதன் கட்டுப்பாட்டாளராகவும் ரோஷிணி நாடார் மாறியுள்ளார்.