90ஸ் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகர் சத்யன். ரோஜா ரோஜா... பாடல் மூலம் சோஷியல் மீடியாவில், டிரெண்டிங் ஆனார். தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்துள்ள ’பைசன்’ படத்தில் ’தென்நாடு...’ என்ற பாடலை பாடி உள்ளார். வழக்கமாக, மாரி செல்வராஜின் கிராமத்து சாயலில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் 3ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ‘தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம்...’ என்ற பாடலை தனது ஈர்க்கும் குரலால், சத்யன் பாடி உள்ளார். வலியவர்களின் வலி மிகுந்த மாரி செல்வராஜின் வரிகளுக்கு தனது மென்மையான குரலால், சத்யன் உயிர் கொடுத்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை வரிசையில் உருவாகி இருக்கும் ’பைசன்’ அக்டோபர் 17ம் தேதி ரிலீசாக உள்ளது.