டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கும் சச்சினின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் MICHEAL VAUGHAN தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர், சச்சினின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்-க்கு 3500 ரன்களே தேவைப்படுவதாகவும், அவருக்கு இன்னும் 3 ஆண்டுகள் நேரமும் உள்ளதால் சச்சினின் சாதனையை ரூட் முறியடிப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.