இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பயிற்சிகளை கிரிக்கெட் வீரர்கள் முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி மைதானத்தில் பயிற்சி செய்த பின்னர் வெளியே வந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்கள் கூட்டத்தை கண்டு ஓட்டம் பிடித்தார். அவரை ரசிகர்கள் பின் தொடர்ந்து ஓடிவந்த நிலையில் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.