வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் 50+ ரன்களை குவித்த ஜோடி என்ற சாதனையை ரோகித் - ஜெய்ஸ்வால் படைத்துள்ளனர்.