பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு, தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல, அவரை தெரிந்த, திரையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தான்... கலகலப்பான மனிதர்... மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரோபோ சங்கர், காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் பள்ளி, கல்லூரிப் பருவத்திலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டவர் சுற்று வட்டார கிராம திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் இவரின்றி கலை நிகழ்ச்சி இருக்காது கருகருவென்றிருக்கும் கட்டுமஸ்தான உடலில், வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ-வாக நடனமாடியதால் ’ரோபோ’ சங்கர் ஆனார்கிராமத்து மேடைகளில் இருந்த இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது விஜய் டிவி‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியால், பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார் ‘ஒரு கிளி உருகுது’ என்ற திரைப்பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம், அபாரம்அடுத்ததாக, ‘அது இது எது’ நிகழ்ச்சியில், ‘சிரிச்சா போச்சு’ என்று, இடைவெளி விட முடியாமல் ரசிகர்களை சிரிக்க வைத்தார்விஜயகாந்த், எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்றோரின் உடல்மொழியுடன் கூடிய இவரது மிமிக்ரி, அடடே ரகம்சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் கவனம் பெற்றவர், 1990களில் சிறிய வேடங்களில் தலை காட்டினார்இயக்குனர் கோகுலின் முதல் படமாக ‘ரௌத்திரம்’ இவருக்கு வாய்ப்பளித்த போதும், திரையில் பார்க்க முடியவில்லைவிடவில்லை கோகுல்... தமது அடுத்த படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் வாய்ப்பளித்தார்விஜய் சேதுபதி, பசுபதி, பட்டிமன்றம் புகழ் ராஜா என்று இவர்கள் தோன்றும் காட்சியில் தமது சைகையால் கவனம் ஈர்த்தார் ரோபோ சங்கர்"குமுதாவோட எல்லா படமும் செல்போன்ல இருக்கு" என்று விஜய் சேதுபதி சொல்லியதில் இருந்து தொடங்கும் ரோபோ சங்கரின் நடிப்பு, கை தட்ட வைக்கும்‘வாயை மூடி பேசவும்’ படத்தில் ‘மட்டை ரவி’ என்ற சிறிய வேடத்தில், அதகளம் செய்திருப்பார்அடுத்து, மறக்க முடியாதது மாரி படத்தில் தனுஷ் உடன் நடித்தது. இந்த கூட்டணி மாரி-2லும் கவனிக்க வைத்தது விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில், இவர் வரும் காட்சிகள் ஒட்டு மொத்த படத்தின் ’ஹைலைட்’‘அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்’ என்று இவர் ஆரம்பிக்கும் வசனத்தை திரும்ப திரும்ப இவர் பேசினாலும், திரும்ப திரும்ப கேட்டாலும் திகட்டாது சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, ‘ஹீரோ’, விஷாலின் ‘இரும்புத்திரை’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, சிம்பு உடன் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்று ரோபோ சங்கர் நிறைவாக நடித்திருப்பார்விரல் விட்டு எண்ணிவிடலாம் ரோபோ சங்கர் நடித்த திரைப்படங்களை... ஆனால், அதில் இவரது நடிப்பை நாள் முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம்... சின்னத்திரை, வெள்ளித்திரை என்று மட்டுமில்லாமல், சமூக வலைதளங்களிலும் மகள் இந்திரஜாவுடன் இவர் போடும் ரீல்ஸ்... வைரல் தான்... வெறும் 46 வயதே ஆன ரோபோ சங்கரின் மறைவு, திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் உலுக்கி உள்ளதுஇவர், காலம் வெல்ல முடியாத கலகலப்பான மனிதர்...