அமெரிக்காவின் சிக்காகோ நகரில் புனித பேட்ரிக் தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நிகழ்வாக ஆற்றில் பச்சை நிற சாயம் கலக்கப்பட்டது. புனித பேட்ரிக் தின கொண்டாட்டங்களுக்கு சிகாகோவின் ஜெர்னிமென் ஆற்றில் பச்சை நிற சாயம் கலப்பது 63 ஆண்டுகளாக பராம்பரிய நிகழ்வாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பேட்ரிக் தின அணிவகுப்புக்கு முன்னதாக ஆற்றில் படகுகள் மூலம் நச்சுத்தன்மையற்ற பச்சை நிற சாயம் கலக்கப்பட்டது. அப்போது திரளான மக்கள் பாலங்களில் நின்று ஆரவாரம் செய்தனர்.