மேற்கு வங்கத்தில் ஹோலி பண்டிகையின் போது இருதரப்பினரிடையே கலவரம் மூண்டதை தொடர்ந்து இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேற்கு வங்கத்தின் சைந்தியா நகரத்தில் ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் மதுபோதையில் இருந்த ஒரு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.