கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இன்னும் இரண்டு மாதங்களில் தகுதியுடைய மகளிர் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எப்படியாவது தமிழ்நாட்டை அபகரிக்க வேண்டும் என்று முயற்சிக்கும் பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி என்ற அடிமை கிடைத்திருப்பதாக கூறினார். மேலும் பல அடிமைகளை பாஜக வலைவீசி தேடி வருவதாகவும், எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுக அவர்களை விரட்டி அடிக்கும் என்றும் உதயநிதி பேசினார்.