நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மீதான கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு 1.22 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே வகையில் மத்திய அரசுக்கு 2.74 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததை வைத்து பார்க்கும் போது, தற்போது, ஒராண்டு வருமானத்தில் 48 சதவிகித கலால் வரி கிடைத்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகத்தின் திட்டமிடுதல் மற்றும் பகுப்பாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதே நேரம் 2020-21 ஆம் நிதியாண்டு முதல், பெட்ரோலியம் விற்பனையில் மத்திய அரசுக்கு கிடைக்கும் கலால் வரி வருவாய் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.