சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.கண்ணாடி பூவே என்ற முதல் பாடல் இன்று ((பிப்ரவரி 13 ஆம் தேதி)) வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சூரியாவுடன், பூஜாஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படம் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.