தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சங்க கட்டடம் கடன் மூலம் கட்டப்பட்டு வரும் நிலையில் 12 கோடி ரூபாய் கடன் டெபாசிட் தொகைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், தனது நண்பர்கள் மூலம் 5 கோடி ரூபாயும் ஏற்பாடு செய்ததற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.