தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிமங்களைக் கொண்டு செல்வதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளத்தின் தேவைக்காக கருங்கல், ஜல்லி, எம் சாண்ட் ஆகியவற்றிக்கு திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தில் உள்ள,15 நிறுவனங்களுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.