குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். காலை 10 மணிக்கு முன்னதாகவே நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தவர், வாக்குப் பதிவு அறைக்குச் செல்லும்போது மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராம் மோகன் நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் வாக்களித்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மாநிலங்களவை உறுப்பினர் 233 பேரும் (தற்போது 5 இடங்கள் காலி), மாநிலங்களவை நியமன உறுப்பினர் 12 பேரும், மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும் (ஒரு இடம் காலி) இடம் பெற்றுள்ளனர்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் என்டிஏ கூட்டணிக்கே அதிக பெரும்பான்மை உள்ளது. மொத்தம் உள்ள 542 மக்களவை உறுப்பினர்களில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.மொத்தம் உள்ள 240 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஆளும் கட்சி கூட்டணிக்கு 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இரு அவைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 786. இதில், 394 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர் அடுத்த குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.என்டிஏ கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் பிஆர்எஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 6 மணிக்கே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.இதையும் பாருங்கள்; IN Sign in Vice President Election | துணை ஜனாதிபதி தேர்தல்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு.? | NDA vs INDIA AllianceVice President Election | துணை ஜனாதிபதி தேர்தல்.. முதல் நபராக வாக்களித்தார் பிரதமர் மோடி | PM Modi