முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஜார்ஜியாவில் தனது பரப்புரையை நிறைவு செய்யும் போது பிரபலமான YMCA டிஸ்கோ பாடலைப் பாடி நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஜார்ஜியாவில் தனது பரப்புரையை நிறைவு செய்த டிரம்ப் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வில்லேஜ் பீப்பிள் டிஸ்கோ இசைக்குழுவினரின் பிரபலமான ஒய்எம்சிஏ பாடலைப் பாடி நடனமாடினார்.