வேலூரில் சாலையோரத்தில் இயங்கி வந்த தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்திய அதிகாரிகளை கண்டித்து, மாநகராட்சி ஆணையர் அறை முன்பு முற்றுகையிட்டு கடையின் உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தள்ளுவண்டி கடைகளை ஆளும் கட்சியின் தலையீடு காரணமாக அகற்றியதாக கூறி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.